Powered By Blogger

Thursday, August 18, 2011

காதலில் கரைந்த நாட்கள்...2




அன்று ஒரு முடிவோட அவளை பின்தொடர்ந்தேன் ...
 என்ன ஆனாலும் சரி விடறதில்ல ..யாராவது பார்த்துடா ..?
எதாவது  கேட்டா..வாய் உள்ள புள்ள பொழசிக்கும்.. சரி..என்ன ஆனாலும் கண்டுபுடிகாம  விடறதில்ல..
வழக்கமா அவள் செல்லும் அந்த typewritting institute ல் அவள் உள்ளே நுழைவதை
பார்த்துவிட்டு .., சற்று தாமதமாக உள்ளே நுழைந்தேன்...!
ஒரே சீராக டைப் அடிக்கும் ஓசை ...நான்கு வரிசையாக ஆண் ..பெண்  என டைப்  அடித்துக்கொண்டு இருந்தனர் ..இரண்டாவது  வரிசையில்  நான்காவதாக  அவள்..ஒரு தேவதை போல... மெல்லிய அவள் விரல்கள் கீ போர்டில் மாறி..மாறி டைப் அடித்துகொண்டிருந்தன ..
என் பார்வை  அவளை  உறுத்தியதாக   தெரியவில்லை ... யாரு வேணும் .. குரல் இப்போது என் பக்கத்தில் கேட்டது. புதுசா சேரனுமா..? பதிலும் அவனே கேட்டான் . 
ஆம் என்பது போல தலையாட்டிவிட்டு  அவன் முன்  அமர்ந்தேன் ..
1 மணி நேரத்துக்கு  ரூ .20 என்று அவன் பட்டியல் வாசிக்க..அவன் தலைக்கு மேல் இருந்த சர்ட்டை கண்கள் மேய்ந்தன ...
மேலிருந்து கீழ ... இரண்டாவது வரிசை திலகா..ராஜரத்தினம் ...ஜெ....யா ....ஜெயா !
ஒரு நிமிடம் தலை கீழாக சுத்துவது போல் இருந்தது ..
 ஜெயா தான் அவ பேர்..  எப்போ join பண்ண போறீங்க இது  அவன்.. 
நான் அவனை மேலும் கீழும் 
பார்ப்பதை கவணித்த .., அவனிடம் இன்னொருவன்....  அவன் அருகில் வர 
நான் மெல்ல எழுந்து வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...
என் முதுக்குக்கு பின்னல் ...டேய் ..இவர் அந்த institute instructorilla என்று சொல்வது கேட்டது .. வேறொரு பயிலகத்தின் பயிற்சி ஆசிரியராக இருந்த நான்.. அவளின் பெயரை தெரிந்துகொள்ள அவ்வளவு மெனக்கடவேண்டி இருந்தது ..
மனுசனுக்குள்ள காதல் வந்துட்டா ...
என்ன பண்ணுவான்... எப்படி பண்ணுவான்... எதுக்காக பண்ணினான் ...ஏன் ...எங்கே .எப்படி..?
தனெக்கென ஒரு வழி ...தனெக்கென ஒரு பாதை ..தனெக்கென ஒரு பயணம் ...
விதி சார் ...விதி... 
அது என் முதல் காதல்...
அது அழகை பார்த்து வந்ததா..இல்ல ...அவள் இயல்பான ஒருத்தி. ..மேனி அலுங்காமல் ...மெல்ல நடந்து வருவதே ஒரு அழகு ..ஒரு வேலை அவள் என்னைவிட ஓரிரு வயது கூட ..இருக்கலாம் ....
காரணம் அளவுக்கு மீறிய ஒரு முதிர்ச்சி அவள் நடையில் தெரியும் ..மெல்ல தலை குனிந்தபடி  (தலை குனிந்தபடி நடக்கும் பெண்களை ..ஆண்களுக்கு பிடிக்கும் ..இது என்ன ஞாயம் ..? என்று கேட்டால்.. அது அப்படித்தான்...சும்மா கேள்வி எல்லாம் கேட்ககூடாது..)...
அந்த காதல் பெயர் தெரிந்துகொண்டதோடு முடிந்து போனது தனி ......
அந்த வயசுல காதல் ஏன் வந்தது ...ஏன் போனது.. என்று யாருக்கும்  தெரியாது. யாராலும் பதில் சொல்ல முடியாத கேள்வியாகதான் அது இருக்கும் ...
காரணம் வயசு அப்படி ...?
இதற்கு ஒரு சரியான உதாரணம் வரும் நாட்களில் சொல்கிறேன் ...அதுவும் ஒரு முதல் காதல் கதை தான்.........!











No comments: