Powered By Blogger

Wednesday, August 17, 2011

பழங்கதை -4






ஷூட்டிங்  வேடிக்கை பார்த்த சுகத்தில் பசியை மறந்துபோனோம் ...அடி வயத்துல பசி பந்து சுருள்வதை தாங்கமுடியாமல் .அருணாசலம் ஸ்டுடியோவில் இருந்து  வெளியவந்து பார்த்தா...கையில காசு இல்ல ..

சினிமாவுக்காக ஓடி வரவங்க மொதல்ல பசியை பழக கத்துக்கணும் ..அப்படி வரவங்க செய்யகூடாத காரியம் ஒன்ன நாங்க செஞ்சோம் .
வடபழனி பஸ் ஸ்டாண்ட் தாண்டி...முருகன் கொவில்கிட்ட வந்து 
சுத்தி சுத்தி பார்த்தா எதிர் வரிசையில "கணேஷ் பவன்"   "கிருஷ்ணா பவன்"    என 2 ஹோட்டல்கள் கண்ணில் தென்பட்டது . அதில் கணேஷ் பவன் இன்னமும் இருப்பதாக ஞாபகம் .. நாங்கள் கணேஷ் பாவனை தேர்ந்தெடுத்தோம் ..


 கையில் ஒரு பெரிய லெதர் சூட்காஸ்.. தோளில் ஆளுக்கு  ஒரு ஜோல்னா பை  எங்க மூஞ்சிய பார்த்தாலே அதில் பசியின் கொடுமை  தெரிஞ்சதோ... ..என்னவோ  கல்லாவில் இருந்தவர்  எந்துருன்னு கேட்டார் . சொன்னோம் ..

அனுபவம் இருக்கானு கேட்டதுக்கு ...அது நெறைய இருக்குனு  சொன்னோம்.யாரோ ஒருத்தனை  கூப்பிட்டு என்னமோ சொன்னார் .. அவன் எங்களை அழைத்துக்கொண்டு ஒரு ரூம் மாதிரியும்  இல்லாம ஹால் மாதிரியும் இல்லாத இடத்தை காண்பித்தான் .. உள்ளே நுழையும் போதே அழுக்கு நாத்தம் வந்தது ..அங்கு நிறைய பெட்டிகள் இருந்தன ..அத்தோடு எங்கள் பெட்டியும் ஐகியம் ஆனது.  வெள்ளைவேட்டி இருக்கா என்றபோது ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம் .. சரி நாளைக்கு  வாங்கிடனும் என்ன புரிஞ்சுதா..? என்று அதற்கு வழியையும் சொன்னான் .
ரொம்ப நல்லவன்டா இவன் என்று நினைத்துக்கொண்டோம் ..
சரி நீபோய் பார்சல் கவுண்டர்ல நில்லு ..என்று என்னை  சொன்னவவன்..
நீ என் கூட வா என்று நண்பனை அழைத்தான்  .., என்னமோ யோசித்தவன்  சாப்டீங்களா என்றான் ..
அதுக்கு தான தலிவா வந்தோம்முனு  என்ற நினைப்போடு  .... இல்ல...
அப்புறம் ..என ரெண்டும்கெட்டனாக தலயை ஆட்டினோம் ...
 சமையலறைக்கு  அழைத்துக்கொண்டு போய் ஒரு தட்டில்
நிறைய சாதமும் நிறைய சாம்பாரும்...
ஊத்தி  நீட்டினான் ..தட்டில்  welcome  என்று பொறிக்கப்பட்டு இருந்தது ..
..ஆனால்  
சினிமா தொலைதூரம் போனது போல இருந்தது ...!




No comments: