Powered By Blogger

Friday, September 30, 2011

சில நாட்கள் ...17



                        
பாட்டில்கள்....!



stock photo : stacked up wine bottles in the cellar
மேலும் பாட்டில்கள் .....?


குடியை மறக்க வேண்டும் என்றுதான் அங்கு போய்சேர்ந்தேன் ..
திருந்தவேண்டும் என்பதுதான் குறிக்கோளாக இருந்தது ...
திருந்த முடிந்ததா ...? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறி.......???????

ஒரு மாதம் எவ்வளவோ சொல்லியும் ......வெளியே வந்த மூன்றாவது 
நாள் ....கால்கள் தானாக ஒயின் ஷாப் வாசலுக்கு போனது...!

அப்புறம் என்ன முன்பைவிட அதிகமாக குடித்தேன்.,,,!
நிலை தடுமாறும் அளவுக்கு .....தெரு முனை வரை வந்து விடுவேன் ..
அதற்குமேல் நடக்க முடியாமல் ... எங்காவது உட்கார்ந்துவிட்டு வீட்டிற்கு 
போன் செய்தால் யாராவது வந்து அழைத்துக்கொண்டு செல்வார்கள்.

பல நாட்கள் மனைவி யாரையாவது துணைக்கு அழைத்துக்கொண்டுவருவாள் ...
அவர்கள் என்னை பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் புரிந்தாலும் ....புரியாததுபோல் 
இருப்பேன். 

காலையில ராஜா மாதிரித்தான் டாடி வெளியே கிளம்பி போறீங்க ...
ஆனா ராத்திரி பிச்சை காரனைவிட கேவலமா வரீங்க என்பார்கள்...

சில நாட்கள் பொன்மணி வந்து அழைத்துபோவாள் ..அப்போது அவள் தோள்மீது 
கைபோட்டபடி வருவேன் ...அப்போதெல்லாம் வெறுப்பு அவள் முகத்தில் தெரியும்..
பெரியவள் என்னை கண்டுகொள்ளவே மாட்டாள் ...

மானம்போனது ...மதிப்பு போனது...மரியாதையும் கூடவே போனது.
நட்பு வட்டம் மெல்ல சுருங்க தொடங்கியது. 
என்னை யாரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை ...
எதற்காக என்றாலும் என்னிடம் வருபவர்கள் யாரும் ..
என்னிடத்தில்  வருவதாக  இல்லை....

ஒரு சமயத்தில் என்னையே எனக்கு பிடிக்காமல் போனது.
ரயிலில் வரும்போது கீழே குதித்துவிடலாமா என்று தோணும்..
வீட்டில் யாரும் இல்லாதபோது ...கத்தியால் குத்திக்கொல்லாமா என்றிருக்கும் ...
ஆனால் எதயும் முயன்றது இல்லை ....

குடியின் வேகம் அதிகரித்தது ...காலை ஐந்து மணிக்கு (எவ்வளவு குடித்தலும் ஐந்து 
மணிக்கு யாரோ தலையில் தட்டி எழுப்பிவிடுவது போல இருக்கும்.)
எழுந்ததும் முதல் கட்டிங் அடிக்க போய்விடுவேன் ... அப்புறம் ஆபீஸ் 
போகும்போது ஒரு கட்டிங் ....மதியம் சாப்பாடு நேரத்தில் ஒரு கட்டிங்...
(சாப்பிட்டால் குடிக்க முடியாது என்று ...).சாப்பிடாமலே ...மூன்று மணிக்கு 
ஒரு கட்டிங்... மாலை ஆறு மணிக்கு ஒரு குவாட்டர் வாங்கி ஒரு கட்டிங் ...
வீடு அருகே வந்து மீதி இருக்கும் கட்டிங்.......இது போதாது என்று குவாட்டர் 
வாங்கி பாக்கெட்ல  சொருகிக்கொண்டு வந்துவிடுவேன்...

வீட்டிற்க்கு வந்தால் எப்படியும் பிரச்சினை வரும் ....எதாவது கத்திவிட்டு 
மீண்டும் ஒரு கட்டிங் அடித்துவிட்டு படுத்துவிடுவேன்.

குடி அப்படி என்னை அடிமை படுத்தி வைத்திருந்தது.   இவ்வளவும் குடி அடிமைகள் 
மறு வாழ்வு மையம் சென்று வந்த பின்னால் தான் நடந்தது .....

வீட்டில் பாட்டில்கள் கடைக்கு போடும் அளவுக்கு இருந்தது. 
எங்கு பார்த்தாலும் பாட்டில்களாக இருந்தது. 

உடல்  நிலை நிலை ரொம்ப மோசமாகிப்போனது.....

அட் லாஸ்ட்  

இப்போது நான் குடித்து ஒரு வருடமாக போகிறது .......

எனக்காக பிராத்தனை செய்த மனைவிக்கு நன்றி சொல்ல முடியுமா...?

அல்லது அது மட்டுமே போதுமா...!

....................................................................அன்புடன் நான்..................................................................................................

No comments: