| கனி & பொனி |
மனிதனுக்கு அத்தியாவசிய அவையங்கள் இரண்டிரண்டு படைக்கப்பட்டிருக்கும் ...
(அதில் இரண்டுதான் மேலே உள்ள ....என் இரு கண்கள் )
ஆனால் இதயம் மட்டம் ஒன்றே ஒன்றுதான்.
அந்த சின்ன இதயத்தில் ...
எத்தனை பேருக்கு இடம் கொடுக்கவேண்டும்....
எத்தனை எத்தனை ஆசைகளை அதில் புதைதுக்கொள்ளவேண்டும்....
எத்தனை கனவுகளை அதில் பதியன்போட வேண்டும் ......
இதயத்தை வரைய சொன்னால் உடனே வரைந்து
அதில் ஒரு அம்பு குறி போடுவன் ஒருவன்.....
இதயத்தை வரைந்து
அதில் இரண்டு இறக்கைகளை வரைவான் இன்னொருவன் ...
இதயத்திற்கும்....மனசுக்கும் என்ன வித்தியாசம்...?
கண்டிப்பாக மேலே உள்ள இரண்டு ஜோடி கண்கள் இதை படிக்கும்...
கேள்விகள் பிறக்கும் ...! என்னப்பா ரொம்ப போரடிக்குது ....உங்க அம்மாவை பத்தி எழுதி இருக்க ......
எங்க அம்மாவை பத்தி கூட எழுதி இருக்க .. சரி ....
எங்க நெனைப்பே உனக்கு வரலையா....?
கேக்குது ....கேக்குது...
உங்கள பத்திதானே.....ம்....என்ன சொல்றது...
உங்கள பத்தி சொல்லறத விட .....
உங்களுக்கு சொல்ல வேண்டியது நெறைய இருக்கு ....
ம் ....ஆரம்பிக்கலாமா.....?
அப்பா ரொம்ப நல்லவன் ...ஆனா ரொம்பவும் கெட்டவன்.........!
ஐயோ ....ஏய் பொன்மணி அவரு கிட்ட போய் பாரு....
வழக்கமா வர்ற மாதிரிதான் வந்திருக்காருன்னு நினைக்கிறன் ....
வாசனை வரல கண்மணி அக்கா.... பாக்கெட்ல கூட ஒன்னும் காணமே ......
இல்ல பொன்மணி ஒரு மாசமா நம்பள பாக்கல இல்ல...
அதனால பைத்தியம் புடிச்சி இருக்குமோ....?
"பேருக்கு பிள்ளை உண்டு ...பேசும் பேச்சிக்கு அர்த்தம் உண்டோ ...
என் தேவையை யார் அறிவார் ...உன்னை போல் .....
கண்மணி அக்கா அவரேதான் ....இன்னும் கொஞ்சம் கூட மாறல....
ஏம்மா....4500 ரூபா வேஸ்டா ....! இவரு எங்கதான் போனாரு...?
நினைவுகளை கொஞ்சம் திரும்பிப்பாக்க போனேன் .......
கொஞ்சம் காஸ்டிலியா தெரியல டாடி....- கண்மணி
திரும்பி பார்த்தமாதிரி தெரியலையே - இது பொன்மணி
இத ...இததான் நா..உங்க ரெண்டு பேர் கிட்டயும் எதிர்பார்கிறேன் ..
நீங்கள் ...நீங்களா இருங்க .. நா உங்களுக்கு நிறைய சொல்லி இருக்கேன் ..
உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ ...! அத தைரியமா செய்யுங்கோ ....?
அக்காவ நீ பாத்துக்கோ ...அவ உன்ன பார்த்துப்பா ...!
சின்ன ..சின்ன சண்டைகள் ... மறுதல்கள்...
விட்டுகொடுக்காமை ....பிடிவாதம் ...இதை எல்லாம் விட்டுறாதீங்க ...
அப்பதான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும்..
அதை கடந்து போகிற வயசு உங்கள்ளுக்கும் வரும்.
அப்போது திரும்பிபார்த்து ...விலங்குகள் சிலிர்ப்பது போல
உதறிவிட்டுவிட்டு மேலே செல்லுங்கள் ....
வாழ்க்கை ருசிக்கும் ..வாழ்க்கை சிறக்கும் ...
புத்திகள் சொல்லி நான் உங்களை வளர்க்க பிரியப்படவில்லை ...
உண்மையை சொல்லி வளர்த்திருக்கிறேன் .
யாரிடமும் ...எதற்கும் பயம் கொள்ள வேண்டாம் ...
உங்களுக்கு மீறிய சக்திக்கு மட்டும் கட்டுப்படுங்கள்...
எஞ்சான் உடம்பில் சிரசே பிரதானம். ... என்பது போல்
நீங்கள் எங்களுக்கு தலையாய் இருக்கிறீர்கள் ....நாங்கள்
வாலாய் மறைந்துகொண்டிருக்கிறோம் ...
காலம் உங்களை கரை சேர்க்கும்.....!!!!!!!!!
அன்பு கண்மணிக்கும்...பொன்மணிக்கும்...
அன்புடன் நான்......

No comments:
Post a Comment