காதல் வலை ...? அவளின் முகம் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது ..... சில சமயங்களில் முதுகுக்கு பின்னால் யாரோ .. நம்பளையே ... பார்ப்பது போல ஒரு தோற்றம் உருவாகும் ... பல சமயங்களில் அது உண்மையாக இருக்காது ..சில சமயங்களில் திரும்பிபார்த்தால் நம்மை உற்று பார்ப்பது தெரியும் . அப்படிதான் அன்று அது நிகழ்ந்தது ... நான் பெரிய பக்திமான் இல்லை என்றாலும் ... ஞாயிறு மற்றும் பண்டிகை காலங்களில் கோவிலுக்கு போவது வழக்கம் .. சாமியாரின் பிரசங்கம் ரொம்ப போரடிப்பது அவருக்கே தெரிந்ததோ என்னவோ ... அவர் முடிக்க அனைவரும் எழுந்து நின்றோம் ... சில வினாடிகளில் நான் அதை உணர்ந்தேன் .... யாரோ என்னை பார்கிறார்கள் ... பக்கத்தில் பார்த்தேன் ....இல்லை .. மீண்டும் ....உணர்ந்தேன் ....மீண்டும்....! நிச்சையமாக என்னை யாரோ பார்கிறார்கள் ....! யாராக இருக்கும் ....ஐம்புலன்களையும் (ரொம்ப பெரிய வார்த்தையோ ..?) சரி ... ரொம்ப கவனமாக பார்த்தல் ... அதான பார்த்தேன் ..... எனக்கு நேர் எதிரே ...... அதாவது ....அது ஒரு பெரிய கோவில் . கிராஸ் வடிவில் இருக்கும்... நடுவில் நீண்டு ..பின் பக்கவாட்டில் ....சிறியதாக இரண்டுபுறமும் .... நடுபாகம் அரைவட்ட வடிவில்... அந்த அரை வட்ட பகுதிக்கு அந்த பக்கம் இருந்து தான் ... முக்காடிட்ட ஒரு பெண் என்னைய பார்ப்பது தெரிந்தது .. ஒரு நிமிஷம் உடலெங்கும் ரத்தம் சூடாக பாய்ந்தது . என் பார்வை .தழைந்தது.. என்னைத்தானா .. ..? மனசெல்லாம் பட்டாம்பூச்சி ..... வெள்ளை தேவதைகள்.. .. இளையராஜா .... கண்ணதாசன் .... வைரமுத்து ....எல்லாரும் .....வந்து போனார்கள் .....! வெள்ளை குதிரையை அடக்கி ....மீண்டும் பார்த்தல் ... அவள் என்னை பார்ப்பது உறுதியானது .. நீலம்..வெள்ளை பள்ளி சீருடையில் ஒரு 20 - 30 பேர் கொண்ட கூட்டம்.. பக்கதுப்பள்ளி ஹாஸ்டல் பிள்ளைகள் ... அதில் இவள் ஒருத்தி .... வெள்ளை தாவணி அவள் முகத்துக்கு மேலும் அழகு சேர்த்து கொண்டிருந்தது ... என்ன காரணமோ அவள் என்னையே பார்த்து கொண்டிருந்தாள்... இயந்திரத்தனமாக .... நிற்பதும் ... முட்டி போடுவதுமாக ...அனிச்சையாக ..... இருவர் கண்களும் நேருக்கு நேர் .... என்ன பண்றது ... யார் இவள்.. எப்படி பேசுவது .....பேர் என்னவாக இருக்கும் .... ஒருவருக்கு ஒருவர் சமாதானம் சொல்லும்போதும் .. அவள் மெல்ல சிரித்தது போல இருந்தது.......! பூசை முடிந்து போனது .... வேக வேகமாக வெளியே வந்து அவர்களை பார்த்தல் .... ஒன்று போலவே அத்தனை பேரும் இருந்தார்கள் .... நல்ல கலகலப்பான கூட்டம்.... அனைவரும் வரிசையில் நின்று மெல்ல நடக்க துவங்கினார்கள் .. நான் பார்த்த அவளை என்னால் அடையாளம் காண முடியவில்லை .... ஆனால் அந்த கூட்டத்தில் சின்ன சலசலப்பை காண முடிந்தது .... எதுவும் புரியாமல் மெல்ல அவர்களை பின்தொடர்ந்தேன் ... அந்த பள்ளி வளாகம் வரை ... பெரிய கேட்டில் இருக்கும் சிறிய கதவை திறந்து அனைவரும் உள்ளே சென்றனர் .... ஒரு சிலர் முன் பின்னாக இடம் மாறி உள்ளேசென்றபோது ...மீண்டும் அந்த மின்னல் முகம் ஒரு முறை திரும்பிபார்த்து உள்ளே மறைந்து போனது ...!......? இனி அடுத்த 8 நாட்களுக்காக காத்திருக்கவேண்டும் .......................... மிக நீ..............ண்...............ட................ 8 நாட்கள் காத்திருப்பு .... காத்திருத்தல் காதலில் கசக்கவா செய்யும் ...... காத்திருந்தேன் ....... காத்திருக்கிறேன் ...... காத்து இருப்பேன் ...... காதலில் சுகமே ..... காதிருதல்தானே ............? |
Thursday, September 8, 2011
காதலில் கரைந்த நாட்கள்...3
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment