Powered By Blogger

Wednesday, September 21, 2011

சில நாட்கள் ...1



சில நாட்கள் ...1

சில நாட்கள் ...(சில நாட்கள்தனா .....?)
 நான் போதையில் இருந்திருக்கிறேன் ...
அந்த நாட்களில் சில ... பல விஷயங்கள் நடந்துள்ளன .. 
ஆசைக்கு குடிக்க ஆரம்பித்து ...
மெல்ல மெல்ல குடிக்கு அடிமையான நாட்கள் அது ...?
வழக்கம்போல் பீரில் ஆரம்பிக்காமல் "மிலிடிரி" ரம் மில் துவங்கியது ...
கட்டிங்கில் ஆரம்பித்தது .... ஒரு முழு பாட்டலில் கொண்டு போய்விட்டது ....


ஒன்னு வேல மேல இருக்கணும் 
இல்ல 
போதை மேல இருக்கணும் ..

இது நம்ம மொழி ...  அது என்னவோ தெரியாது .. குடிக்க மட்டும் காசு தானா வரும் ...
காலையில் ஆரம்பித்து இரவு வரை குடி ...குடி.. 
குடியை தவிர வேறு ஒன்றும் இல்லை ...
அப்படி குடித்தேன் ஒரு நாள் ஞானோதயம் வந்தது ....அது 24 .08 .2009 .....

மனைவியிடம்  சொல்லி விட்டு  பையை எடுத்துக்கொண்டு  
குடி அடிமைகள் மறு வாழ்வு  மையத்திற்கு போனேன் ...
போகும் போதும் குடித்து விட்டு தான் போனேன் . சில ..பல ..கேள்விகளுக்கு 
(எனக்கு கேள்விகள் பிடிக்காது )  பிறகு சேர்த்துக்  கொள்ளப்பட்டேன் ..
கொண்டு போன 1 பாகெட் சிகரெட் ..செல்போன் .பறிக்கப்பட்டது .. 
தேவைபட்டால் போன் செய்ய அனுமதிப்பதாக சொல்லப்பட்டது ..

அங்கு என்னோடு சேர்த்து 11 பேர் இருந்தோம் ...
அனைவரும் உடனே நண்பர்களாயினர் ..
காரணம் பீடி .சிகரெட் .ஹான்ஸ் . 
என எதாவது கொண்டுவந்திருப்பேன் என நினைத்தனர் .

அங்கு ஒவவொருவரும் ஒரு ஒரு விதமாக இருக்க ... 
நான் அவர்களுக்கு எதிர் பக்கமாக இருந்த 
ஒரு கட்டிலை தேர்ந்தெடுத்தேன். 
புத்திமதி மாதிரி இல்லாமல்  (நமக்கு புத்திமதியும்  பிடிக்காது...! )
குடியை பத்தி வகுப்புகள் நடந்தது ..
எனக்கு வீட்டிற்கு ஒரு போன் செய்யணும் போல இருந்ததால் ...கேட்டேன் ..
மறுத்தார்கள் ..மிக பெரிய சண்டை நிகழ்ந்தது ... 
மனைவியிடம் அவர்கள் நடந்தை சொல்ல ... 
நான் அங்கு இருக்க மாட்டேன் என்றேன் ..  
உடனே அங்கிருந்து கிளம்ப வேண்டும் போல இருந்தது .. 
மனைவிக்கு தகவல் தெரிந்து அவள் அங்கு வர....
அவள் பர்சில் இருந்து 5 ௫ எடுத்துக்கொண்டு ... 
நான் வெளியே போய் வருகிறேன் என்றேன் .  விட மறுத்தார்க்ள்..


தடை மீறுவது நமக்கு ரொம்ப பிடிக்கும்....
வேக வேகமாக வெளியே வந்து ஒரு சிகரெட் பற்ற வைத்து 
புகையை ஆழமாக இழுத்தேன் ...................
நெஞ்சுகூட்டில் புகை வேகமாக பரவ ...
மனசு ஒரு நிதானத்துக்கு வந்தது ...
யோசிக்க ஆரம்பித்தேன் ...இங்கிருந்து வெளியே போனால் ...
மீண்டும் குடி  ஞாபகம் வந்து ...

அப்பப்பா நினைக்கவே பயமாக இருந்தது ...
மீண்டும் ஒரு சிகரெட்  பிடித்தவுடன் ..
புத்தி ஒரு நிதானத்துக்கு வந்தது ...
மீண்டும் உள்ளே சென்று நான் இருக்கிறேன் என்றேன் ..

அவர்களுக்கு .. ஆச்சிரியமாகவும்.. அதிசயமாகவும் இருந்திருக்கும் போல .... 
அங்கு ஒரு முறை உள்ளே போனால்  1  மாதம் இருக்க வேண்டும் ..
வெளியே போய் உள்ளே வந்தது . அனேகமாக நானாகதான் இருக்கும் ....

நண்பர்கள் அனைவரும் என்னை சூழ்ந்துகொண்டனர் ... 
வெளியே போனவன் கண்டிப்பாக 
பீடியும் . ஹன்சும்  கொண்டு வந்து இருப்பேன் என நினைத்தனர் .. 
அது அப்போது தான் எனக்கு உரைத்தது ....
மறு வாழ்வுக்கான பயணம் மீண்டும் துவங்கியது ... .!
அந்த ஒரு மாதத்தில் நடந்த சில நினைவுகள் .....!
என் வழக்கையை மாற்றியதா .. .....?
நான் குடியை மறந்தேனா ..?


குடிக்கும் போதெல்லாம் நிறைய விஷயங்கள் .... நடந்தது....... 
அதில் எனக்கு ஞாபகம் இருக்கும் சிலதையும் சொல்கிறேன்....
அடுத்தவன் கதைன்னாகேக்க நாம தான் முதல்ல நிப்போமே....


ஆனால் இந்த செய்திகள் உங்களுக்காக சொல்லப்படுபவை அல்ல....
வழியில் நீங்களும் தெரிந்து கொள்கிறீர்கள்.....அவ்வளவே...... 
உங்கள் கருத்துக்களுக்கான விஷயமல்ல இது......?

No comments: