Powered By Blogger

Saturday, November 12, 2011

கடிதங்கள்....2

வாய்ப்பு தேடி அலைந்த கதை...2


கொடுமை என்னன்னா ... அவரை பார்த்தபிறகு .....நாட்கள் நகரவே இல்லை . ...
சரியாக ஒரு மாதம் கழித்து ....மீண்டும் அதே போலொரு அதிகாலையில் பயணித்து


அவர் வீட்டிற்கு வந்த போது .........
வாசலில் இருந்த கிரில் கேட் சட்டை போட்டிருந்தது .....!


மிகவும் பிசியான ஆள் அவர். எனக்கு அது ஆச்சரியமாக இருந்தது.
அன்னிக்கு அவர் அந்த வேலையை செய்து முடித்திருக்க வேண்டும்.


வெளியில் இருப்பவரை எட்டி கடிக்க முடியாதபடி ...கதவில் தகர சீட் வேயப்பட்டிருந்தது ....
இம்முறை தைரியமாக கொஞ்சம் வேகமாகவும் ...கொஞ்சம் நாசுக்காகவும்...
தட்டினேன் ...


மீண்டும் அதே பெண்மணி கதவை திறந்து பார்த்து ....இம்முறை ஒன்றும் கேட்காமல் 
கதவை மூடிய........ அதே வேகத்தில் திறந்து வாயில் பல்தேய்க்கும் பிரஷுடன் அவர் 
வெளியே வந்தார்.


அவர் என்னை ஞாபகம் வைத்திருப்பார் என்கிற நம்பிக்கையில் நான் அவர் முகத்தை 
சிநேகத்துடன் பார்க்க ....அவர் வழக்கம் போலவே .


யாரு ....?   என்ன வேணும் ....? என்ற கேள்வியை போட்டார் ....!
எனக்கு தூக்கிவாரி போட்டது ...!
சார்... போனமாதம் ....என்று துவங்கப்போன நான் .... 
பேசாமல் கையில் இருந்த கடிதத்தை அவரிடம் நீட்டினேன்.


’வாசலுக்கு வந்த போது.....எஜமானருக்கு 
என்னவோ... ஏதோ... என்று 
பாய்ந்து வந்ததே உங்கள் வீட்டு பப்பி 
பாவம் அதற்கு தெரியாது ...!
நானும் ஒரு நாய் தான் என்று .....


ஏதாவது எச்சில் இலை விழாதா ..
அதை மனசுக்குள் பதியன் போட்டு 
அது வளர வளர .....
நானும் வளரலாமே என்று 
வாசலுக்கு வெளியே காத்திருக்கிறேன் ' 



என்ற என்னுடைய கடிதத்தின் முதல் வரிகள் ... அவரை பாதித்து இருக்க வேண்டும்..
அவர் கைகள் அந்த கேட்டில் இருந்த தகர ஷீட்டை தடவி கொண்டிருந்தன..


நடுவில் ஒரு முறை எச்சில் துப்பிவிட்டு வந்தார்.


கடித வரிகள் எனக்கு இப்போது ஞாபகம் இல்லை என்றாலும்.....அதை படிக்கும் 
போது அவர் ரசித்ததை என்னால் உணரமுடிந்தது...


ஒரு வழியாக அவர் முடித்தார்.... இப்போது அவர் கொஞம் நெகிழ்ந்திருந்தார்..
உடம்பில் இருந்த விரைப்பு கொஞ்சம் குரைந்திருந்தது...


சகஜ நிலைக்கு திரும்பிய அவர் ‘அதான் சொன்னேனேப்பா...  8  பேர் இருக்காங்க...
யூனிட்ல அவங்களுக்கு கார் கொடுக்கறதுக்கே...சலிச்சுக்குறாங்க......
என் கிட்ட வண்டி இருக்கு சார்...
வேகமாக சொன்னேன்....


கடிதத்தை மெல்ல மடித்து .... அதை மீண்டும் கவரில் போட்டார்.....
ம்.....ம்.... நீ....வந்து.....
ஆபிஸ்ல பாருன்னு சொல்வாருன்னு நினைத்த நேரத்தில்......
“அடுத்த மாசம் வந்து பாரு”...... என்றார்.


அய்யோ மறுபடியும் மொதல்லேர்ந்தா.....? 
அடுத்த மாசம் வரும் போது இவர் நம்மள ஞாபகம் வெச்சிருக்கனுமே.....


அப்புறம் பாக்கலாம்....ஷுட்டிங்கு டைம் ஆச்சி.... என்று சொல்லிவிட்டு ....மீண்டும் பல் தேய்தபடி
உள்ளே போக திரும்பினார்...


சற்றும் மணம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரம் ஏறினான்.....!

நம்ப சிறிது கடினமாக இருந்தாலும்.....


தொடர்ச்சியாக 5 மாதங்கள்....


5 வது கடிதத்தோடு அவர் முன் சென்ற போது.... 


யோவ் லெட்டர் -லாம் வேனாமயா..... நா கூப்புடுரேன்....என்றார்.....
அவர் வார்த்தையில் சினேகம் ஒட்டிக்கொண்டிருந்தது....


இது வரையில் தொட்ச்சியாக 5 மாதங்கள் வந்து போயாயிச்சி....
இந்த கூப்பிடுறேனுக்கு....எத்தனை நாளோ... மாதங்களோ.........?


அந்த நாள்.....


ஒரு வழியாக வந்தது.....


அவர் என்னை அழைத்தார்..... ஆனால் நடந்தது.......!




மீண்டும் சந்திப்போம்...










No comments: