Powered By Blogger

Thursday, July 21, 2011

அவள் ...


ரொம்ப அழகு இல்ல...,!



அவளுக்கு அப்போ 4 வயசு பள்ளிக்கூடம் செல்ல டிவிஎஸ் மொபெட்ல்
முதலில் பிரையார் (எனக்கும் அப்போதுதான் ஆங்கில பிரேயர் தெரியவந்தது..
(இது ..அவளுக்கு தெரியுமா ...?)

அப்புறம் எ போர் ஆப்பிள் பீ போர் .பால்..







சொல்லிக்கொண்டு போனதில் எனக்கும் கொஞ்சம் பழைய ஞாபகங்கள் ..
இறக்கிவிட்டு சுத்தி வந்து ஜன்னல் வழியா என்ன பண்றானு பார்த்த போது
அவள் என்னை தேடாமல்....
பக்கத்துக்கு பிள்ளையிடம் மிட்டாய் கேட்டு கை நீட்டுவது தெரிந்தது ...


ஒரு கணம் கோவமும் .. அழுகையும்..... வந்தது.


என்ன கொடும சார் இது ...
பள்ளிக்கூடம் போற பிள்ளைக்கு ஒரு மிட்டாய் வங்கி கொடுக்கணும்னு கூட 
தெரியாதவன் ஒரு அப்பனா..?
ஓடி போய் பக்கத்துக்கு கடையில் ஒரு பாக்கெட் பிஸ்கட்
வாங்கி வந்து அவளிடம் கொடுத்து, பக்கத்துக்கு பிள்ளைகளுக்கும்  
கொடு நீ அவங்ககிட்ட கேட்ககூடாது ....
என்ன சரியா என்று மூன்று நான்கு தடவ சொன்னபோது
(இத நீ முன்னடிய பண்ணியிருந்தா  நா ஏன் பக்கத்துல கை எந்த போறன்னு
கேட்பது போல இருந்து .)


அவளும் பக்கத்துல பிள்ளைகளுக்கு கொடுக்க ...
மனசு லேசாக வண்டியை எடுத்தேன் ..
வழியில் அந்த கடையில் ஒரு 4 ..5 .... அப்பாக்கள் பிஸ்கட் 
பாக்கெட் வாங்குவதுதெரிந்தது ..
ஆஹா அவள் பிஸ்கட் கொடுத்ததை தப்பாக புரிந்து கொண்டர்களா....
என நினைத்தபோது ..


இவள் கை நீட்டியது நினைவுக்கு வந்தது ....!

No comments: