Powered By Blogger

Tuesday, August 2, 2011

பழங்கதை -2









கலைப்பயணத்தின் முதல் நாள்..... அப்போது சென்னைக்கு எங்கள்
ஊரில் இருந்து இரவு நேரத்தில் இருந்த ஓரே ரயிலை பிடிக்க.....
நாள்... நட்சத்திரம்...தேதி ..... கிழமை.... வடக்கே சூலமா..... இல்ல
தெற்க்கே மூலமான்னு பாக்காம..........
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் புறப்பட தீர்மானித்த நாள்.....




அது 1980 ஜனவரி 17
அன்னிக்கி மாட்டுப்பொங்கல் .......
நண்பன் வீட்டில் கட்டிக்கொடுத்த பொங்கல் பார்சலை
எடுத்துக்கொண்டு சென்னைக்கு திருட்டு ரயில் பயணம். துவங்கியது....
(அது என்னடா சினிமாவுக்கு வரவன் எல்லாம்
திருட்டு ரயில்ல தான் வரனுமா?. இனிமேல அப்படி வராதிங்க ..)



இதை எழுத எனக்கு என்ன யேக்கியதை இருக்கிறது என்பதை
இதை படித்து முடித்து விட்டு முடிவு செய்ய வேண்டியது .... நீங்கள் தான்....!




நேற்று போல இருக்கிறது .
நிறைய கனவுகள்......... திருபாதிரிபுலியூர் என்று இன்றும்
அழைக்கப்படும் கடலூர் ரயில்வே ஸ்டேஷன்....
எங்கள் கனவுகளை கண்டு பயந்தவன் போல....  புஸ்...புஸ்... புஸ்ஸ்ஸ்....என
பெருமூச்சு விட்ட படி வந்து நின்ற அந்த ரயிலில்...


இரவு முழுவதும் கவலை இல்லா மனிதர்களின் பாட்டும். கூத்தும் ...
கூட்டத்தோடு கூடி பாட்டு பாடியபடி...


ஒரு நாள் நா பெரிய ஆளா...? வருவேன் பாருங்க என்று சபதம்
எடுத்து ... மறு நாள் சென்னை வந்து இறங்கினால் ..? என்ன
எக்மோர் வாசல்ல இம்பாலா காரா நிக்கும் ..?


பாலச்சந்தரின் மரோசரித்ரா பட போஸ்டர் .. எங்களை வரவேற்றது...
சபையர் தியேட்டர்ல காலை காட்சி உடு..............ஜூட் ...




நண்பனும் நானும் நடராஜா பஸ் சர்வீஸ் ல வழி தெரியாம எங்க எங்கயோ
சுத்தி .......யார்...யாரையோவழி கேட்டு..  வந்து படம் பார்த்தோம் ..
படம் முடிந்து வெளிய வந்த போது.. இனி பாலசந்தர் ஆகா ..,
ஊர் திரும்பறது இல்லைன்னு..
முடிவு பண்ணிட்டு வெளிய வந்தோம் .......!


பொங்கல் கெட்டுபோய் 
கொழ கொழன்னு இருந்தது ....


இது கதையல்ல நிஜம்....... தொடரும்.......

No comments: