| .........? |
மரோசரித்ரா படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது
சென்னை (அப்போது மெட்ராஸ் ) கொஞ்சம் மங்கலாக தெரிந்தது .
படத்தோட எபக்ட் அப்படி ...
சரி அடுத்தது என்ன பன்றது. சரி எதுக்கு வந்தமோ அந்த வேலைய பார்க்கலாமுன்னு ... நாம பாரதிராஜா விலாசத்தை கேட்டா..
படம் பார்த்த சபைர் தியேட்டர் பக்கதுல பர்சன் காம்ளக்ஸ்குவழி காட்டிய அந்த நண்பருக்கு ஒரு தேங்க்ஸ் சொன்னோம் ...?
சினிமா ரொம்ப பக்கத்துல தான் இருக்குபோல....?
என்கிற நினைப்பில் அங்க போனா ஆபிஸ் காலியாக இருந்து.. அவரு படபிடிப்புக்காக வெளியூர் போயிருந்தார் ....சட்டுனு சினிமா தூரமா போய்ட்டது போல இருந்தது ...!
அட இதுக்கெல்லாம் அசந்துட்டா எப்படின்னு..? வந்தாரை வாசக்கதவ விரியதிரந்துவசிட்டு காதிருக்கும் கோடம்பாக்கம் சாலையில் நடக்க ஆரம்பித்தோம் .
வழிநெடுக இருந்த ஸ்டுடியோகள் எதிலும் உள்ளேநூழைய
வழிநெடுக இருந்த ஸ்டுடியோகள் எதிலும் உள்ளேநூழைய
அனுமதி மறுக்கப்பட்டது .. கடைசியாக அருணாசலம் ஸ்டுடியோவில் கேள்விகேட்க யாரும் இல்லாததால் ...
எங்கள் பாதங்கள் முதலில் பட்ட புண்ணியத்தை அது பெற்றது ..
எங்கள் பாதங்கள் முதலில் பட்ட புண்ணியத்தை அது பெற்றது ..
உள்ளே சுதாகர் சுமதியுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தார்....சுதாகர் 40 " பெல்பாட்டம் போட்டுகொண்டு நல்ல உயரமாக இருக்க கதாநாயகி அவர் உயரத்துக்கு ஈடு கொடுக்க காலுக்கு ஸ்டுல் போட்டுகொண்டு காதலித்து கொண்டுஇருந்தார்..!
சொந்த ஊரில் நாங்களும் ஹீரோ தான்டி .. (கேட்டதானதெரியும்..?)
சுதாகர் பக்கத்துல போய் நிக்கலாம்னு எங்களை நாங்களே பார்த்தபோது நேற்று போட்ட பாண்ட்சட்டை கொஞ்சம் கேவலமா தெரிந்தது ...
உடனடியா வெளியவந்து நம்புனா நம்புங்க நட்ட நாடு ரோட்டில் பாண்ட்சட்டை மாற்றினோம்...
( அப்பெல்லாம் ரோட்டுல கூட்டம் கம்மியாதான் இருக்கும் ...)
டைரக்டர் யாருன்னு ஞாபகம் இல்ல ...ஆனா camaraman ஹேமச்சந்திரன் என்று ஞாபகம்....
( அப்பெல்லாம் ரோட்டுல கூட்டம் கம்மியாதான் இருக்கும் ...)
டைரக்டர் யாருன்னு ஞாபகம் இல்ல ...ஆனா camaraman ஹேமச்சந்திரன் என்று ஞாபகம்....
சலிக்க சலிக்க ஷூட்டிங் வேடிக்கை பார்த்ததில் நேரம் போனது தெரியல ..
வயத்துல பசி எடுக்க ஆரம்பித்தது ....!
சினிமா...? எங்கள் வயத்தில் புளியை கரைக்க ஆரம்பித்தது ...?

No comments:
Post a Comment