Powered By Blogger

Wednesday, August 24, 2011

பழங்கதை - 5

    ஒரு 4 மணிநேரம் நடந்தால் ...






கணேஷ் பவன்லில் நன்றாக சாப்பிட்டுவிட்டு .., பார்சல் கட்டும் இடத்தில் என்னை நிற்கசொன்னர்கள்.. பில்லை பார்த்து பொட்டலம் கட்ட வேண்டியதுதானே .. 
எனக்கு முதல் பில்லில் பொங்கல் வடை என்று இருந்தது .. பொங்கல்வடையா ..என்று திரும்பவும் அவனை கேட்டுவிட்டு பேப்பரை எடுத்து அதில் இலையை வைத்து மற்றவர்களைப்போல் ஒரு தட்டு தட்டிவிட்டு  இரண்டு கரண்டி பொங்கலை வைத்து.. இலையை இலேசாக மடித்து தேங்காய் சட்டினி வைத்தேன் ... அது வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது..
கையில் பொங்கல் சூடு தாங்கமுடியல .இந்த கையில் இருந்து அந்த கைக்கு பொட்டலத்தை மாற்ற... பக்கத்தில் இருந்தவனும் ..வாங்கவந்தவனும் என்னைபார்த்துகொண்டிருந்ததை உணரமுடிந்தது. அதை கவனிக்காமல் பொட்டலத்தை மடிக்க ... இந்தபக்கம் மடித்தால் அந்தபக்கம் பொங்கல் வெளிய வந்தது ..(உலகில் எந்த வேலையும் சுலபம் இல்லை ..ஹெடேல் போனால் பார்சல் வாங்க அவசரபடாமல் இருக்கவும் ..என்னை போல அவனும் இருக்கலாம்.)
ஒரு   வழியாக பொட்டலத்தை மடித்துவிட்டு பார்க்கும் போது அது பொங்கல் பார்சல் தானாஎன்று எனக்கே சந்தேககமாக இருந்தது ...

நாள் முழுவதும் நடந்து அலைந்த களைப்பு  கொஞ்சம் உட்காரேன் என்றது கால்கள்.. இரவு  8 மணிக்கு ஒருவன் வந்து ஓகே நீ போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலை 5 .30 மணிக்கு வந்தா போதும் என்று சொல்ல .... ஓடிபோய் அந்த அழுக்கு நாத்தம் வந்த அறையில் உட்கார்ந்தேன் ..இரண்டு நிமிடத்துக்கு மேல் முடியல.. ..எழுந்து முகம் கழுவியபோது ..பக்கத்தில் வசந்த பவனில் இருந்த நண்பன் ஞாபகம் வந்தது.
அங்கு போய் பார்த்தல் நண்பனை காணவில்லை ..நான் பார்த்தது பார்சல் கௌண்டர் .. இதுன்னடா  ஆளை காணோம் என்று சந்தேகம் வந்து சுற்றிலும் பார்த்தல்  நண்பன் மேசை ..மேசையாக சுற்றி வந்து தண்ணீர் சப்ளை செய்துகொண்டு இருந்தான் ... இந்த நான்கு மணிநேரமாக குறைந்தபட்சம்
ஒரு 25 - 30 கி.மீ நடந்து இருப்பான்.. முகத்தில் அந்த களைப்பு தெரிந்தது ..

அவனும் வேலையை முடித்துவிட்டு வந்தான் ...இருவரும் மூடிஇருந்த ஒரு கடை வாசலில் ரொம்ப நேரம் அமைதியாக இருந்தோம் ..முடியலைடா...
நாம இதுக்கா வந்தோம் ...பேசி முடிவெடுத்தோம் ...நேராக கணேஷ் பவன் உள்ளே போய் பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தோம் .. கல்லாபெட்டியில் இருந்தவன் ..டோய் ..டோய் .. என்று குரல் கொடுத்ததை கவனிக்காமல் வெளியே வந்து.. கோடம்பாக்கத்திற்கு எதிர் திசையில் நடக்க துவங்கினோம்...கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்த பெஞ்சில் படுத்தோம் ...

விடிந்தால் எங்கே போவது ...என்ன செய்வது ..என்ற யோசனையில் ..எப்போது தூங்கினோம் என்று தெரியாது ... உள்ளங்காலில் லேசாக வலித்தது போல இருந்தது ... கண்களை கசக்கியபடி கண்  விழித்தால் எதிரே இரண்டு போலீஸ் காரர்கள் ...
உலகம் தலைகிழாக சுத்துவது போல இருந்தது...
சினிமா கண்ணுகு எட்டிய தூரத்தில் இருப்பதாக தெரியவில்லை  ..?

2 comments:

kanmani said...

niceeeee....

kanmani said...

nice...........