Powered By Blogger

Wednesday, September 21, 2011

சில நாட்கள் ...2








அந்த மையத்தில் ஒரு நோட்புக் கொடுத்து 
தினம் தினம் உங்களுக்கு தோன்றும் எண்ணங்களை 

இதில் பதிவு செய்யுங்கள் என சொன்னார்கள் ..
நான் உணர்வுகள் என தலைப்பிட்டு எழுதினேன் ..
மாலை வகுப்பில் அனைவரும் அதை படித்து கண்பிக்க வேண்டும் ...

அனைவரும்  அவரவர்களே படிக்க நான் சந்தியையே படிக்க சொன்னேன் .... 
காரணம் கேட்ட போது
எனக்கு எழுததான் வரும் ... படிக்க வராது என்றேன் ..
ஆனால் அது அல்ல காரணம் ...

நாம் படித்தால் மற்றவர்களின் முக பாவனைகளை பார்க்க முடியாது .
படிப்பவரின் முக பாவனைகளை கவனித்து பார்த்தல் .. 
அதில் ஏற்படும் மாற்றங்களை 
ரசிக்கமுடியும்  என்பதால் தான்

உணர்வுகள் ...1 

"மனிதன்  தானாக முயன்றாலும் ...,
அல்லது அடுத்தவர்கள் முயன்றாலும் 
மரணம் அவனை நெருங்குவதில்லை "
அது  இறைவனின் விருப்பமாகதான்
இது வரி நடந்தேறி இருக்கிறது ..

உணர்வுகள் சொன்னாலும் 
உணர்சிகள் தூண்டினாலும் 
மனம் சொல்லுவதை  "மதி" 
ஏற்க மறுக்கிறது ..

அந்த "மதி" கேட்டு போவதினால்தான் 
மனிதன் பாதை மாறி போகிறான் ...
அப்படி போனவர்கள் இந்த உலகத்தில் 
நிறையபேர் இருக்கிறார்கள் ..
அவர்களில் நானும் ஒருவன்
அதனால் தான்  நான் ...இன்று ..இங்கே ..
இந்த நிலையில் ....
ஆனால் இதுவும் கடந்துபோகும் ..................


 


No comments: