Powered By Blogger

Thursday, September 22, 2011

சில நாட்கள் ...10

சிறகுகள் வேண்டாம் ...?



உணர்வுகள்   இன்றியும் ....  
உணர்சிகள்  இன்றியும்  இருக்கமுடியுமா ..?
முடியும் ....
அப்படி  இருக்கும் போது அவன்  
மரணம்   அடைந்திருக்கக்கூடும் .....
உணர்வுகள்  இருக்கு .... ஆனால்
உணர்சிகள் இல்லை ...
எங்கும்  ஒரே  சூன்யம் ....சூன்யம் ...
கண்ணை   கட்டி காட்டில்  விட்டது போல  ஒரு உணர்வு ...!
தறிகளை எல்லாம்  உடைத்துக்கொண்டு
ஆனந்தமாய்  அண்டவெளியில்   மிதப்பது  போன்ற ஒரு நிலை ...
இரண்டும்  மாறி மாறி  வருகின்றன ...
கூண்டில் அகப்படவா ...?
அல்லது  விடுதலை  பெறவா...?
எதை பற்றியோ  சதா சிந்தனை ....
ஆனால் கூண்டைவிட்டு  பறக்க  முடியுமா ...
சாமான்யமான  கூண்டா அது ...! 
தங்கத்திலே   செய்து ... அழகான  இரண்டு  வைரங்களை 
பதித்ததாயிற்றே   அந்த  கூண்டு  .....
விரும்பி  அதில்  அடைபட வேண்டியதுதான் .
அவ்வளவு சீக்கிரம்  விடுதலை  கிடைக்காதுதான் ....
எனினும்  அது  என்னுடைய  கூடு ....
சிறகடிக்க  விருப்பம்  இல்லை ..................!  



அன்புடன்  நான் ..............

No comments: