| கடிதங்கள்....1 |
நானும் சில கடிதங்களை எழுதிருக்கிறேன் ......
அதில் பல கடிதங்கள் சேரவேண்டிய முகவரி போய் சேர்ந்தது இல்லை.....!
சில கடிதங்கள் முகவரிக்கு போய் சேர்ந்திருக்கிறது...
சேர்ந்த கடிதங்கள் சிலவும் ..... போய் சேராத சிலவும் ....
உங்கள் பார்வைக்கு ...............?
சினிமாவோடு.... டிவி ம்.... முயற்சிக்கலாம் என்கின்ற எண்ணத்தில் டிவி பார்க்க
ஆரம்பித்ததில் அப்போது மிக பிரபலமாக இருந்த 'சித்தி' சீரியல் இயக்குனர்
C .J பாஸ்கர் இடம் சேரலாம் என முடிவெடுத்தேன்.
(ஒரு வாட்டி முடிவெடுத்த பின்னாடி நம்ப பேச்ச நம்மாலே கேட்க மாட்டோம்ல ...?)
ஒரு நல்ல நாளில் காலை 5 .45 மணிக்கு அவர் வீட்டு வாசலுக்கு வந்து நின்றேன் .
தெருவே அமைதியாக இருந்தது . வீடு அதுதான் என்பதை ஒரு லாண்டரி காரனிடம்
உறுதிசெய்துகொண்டேன் .
வீட்டினுள் எந்த சலனமும் இல்லை ...
அப்போது அவர் கார் வைத்திருந்தாரா என்பது எனக்கு
தெரியாது. வாசலில் கார் இல்லை... வாசலில் ஒரு சைக்கிள் மட்டுமே இருந்தது .
சிறிய வீடுதான் . வாசலில் கிரில் கேட் உள் பக்கமாக பூட்டி இருந்தது ..
அப்போ ஆள் உள்ளே இருக்கிறார்கள்.. எப்படியும் கதவை திறந்துதானே ஆக வேண்டும்.
எதிர் புறத்தில் வாசலையே பார்த்தபடி காத்திருக்கிறேன் ....!
அவரை பற்றிய எந்த விபரமும் என்னிடத்தில் இல்லை.
'சித்தி' டைட்டில் கார்டு ....
இணை இயகுனர்கள் ரத்தினசாமி...அருள்ராய்.
தயாரிப்பு ராடன் ...
கதை ..இயக்கம் C J பாஸ்கர் ...
இவை மட்டுமே அவரை பற்றி எனக்கு தெரிந்த விபரங்கள்...
நண்பர் ஒருவரின் நண்பருக்கு சொந்தகாரர் .... அவர் நண்பரிடம் சொல்ல ..அதை அவர்
என்னிடம் சொல்ல நான் முகவரி வாங்கிகொண்டு ... இப்போது அவர் வீட்டு வாசலில் .
இத்தனிக்கும் அந்த நண்பரை எனக்கு தெரியாது. !
நன்றாக விடிந்திருந்தது .. வாசலில் ஆள் நடமாட்டம் தெரிவதாக இல்லை ..
இப்போது மெல்ல கேட் அருகே வந்து நோட்டம் பார்த்தால் ... காலிங் பெல் கேட் அருகே
இல்லை ... நன்றாக தேடிப்பார்த்ததில் உள்ளே வாசலுக்கு அருகே இருந்தது...
வருவது வரட்டும் என்று கேட்டின் தாழ்பாளை தட்டினேன் ...அது எனக்கே கேட்கவில்லை ..
கொஞ்சம் வேகமாக தட்ட முயன்ற போது... கதவு திறந்து ஒரு பெண் தலையை மட்டும்
வெளியே நீட்டி யார்...? என்றது . கேட்ட தொனியே சரி இல்லாதது போல இருந்தது .
தயங்கி ... சார ...என்று துவங்குவதுற்குள் .... கதவு சாத்தப்பட்டது ....!
ஒரு நிமிஷம் ஒன்னும் புரியல ....சரி நாம நினைக்கிறது எல்லாம் நடந்துட்டா.....
அதற்குள் கதவு திறந்தது ..ஒரு உண்மையை சொல்லணும் ...
இதற்கு முன் நான் இயக்குனரை பார்த்தது இல்லை.
கதவு திறந்த வேகத்தில் அவரை முந்திக்கொண்டு வெள்ளை பொமோரியன் நாய் குட்டி ஒன்று பாய்ந்து ஓடி வந்து கிரில் கேட்டின் இடையே இருந்த இடை வெளியில் பாய்ந்து ..
என் சட்டையின் நுனியை கவ்வி இழுத்தது...
நான் என்னசெய்வது என்று புரியாமல் .....நாய்க்கு வலிக்குமா.... இழுத்தால் ஒனருக்கு வலிக்குமா ...
என்கிற ரீதியில் .... மெல்ல இந்த பக்கம் நான் இழுக்க ...அந்தபக்கம் அது இழுத்தது .
என்னை மறந்த அவர் அதை மிரட்டி உள்ளே இழுக்க என் சட்டை கிழ் பகுதி நாயின் பல் பட்டு
கிழிந்தது .... ஒரு வழியாக நாயை உள்ளே விரட்டிவிட்டு.....யாரு.....என்னப்பா வேணும் என்றார்.
அப்போதுதான் கவனித்தேன் ..அவர் கையில் இரண்டாக மடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட் இருந்தது.
அனேகமாக நான் வருவதற்கு முன்னமே அவர் எழுந்திருக்கவேண்டும் . அன்றைய ஷூட்டிங்
டைலாக் பேப்பர் தான்அது ... அருமையான காலை ...என்னால் பாழானது.
மீண்டும் அவர் என்னை யாருப்பா என்று கேட்க நான் உளறிகொட்டினேன்..அப்போதே எனக்கு புரிந்துபோனது. இது வேலைகுஆகது என்று.
நான் தைரியமாக திருவல்லிகேணியில் இருக்கும் உங்க சொந்தகாரர் அனுப்பினர் என்றேன்.
அப்படி யாரையும் தெரியாது என்றார் .... சரி உனக்கு என்ன வேணும் என்றார்.
வாய்ப்பு தேடி வந்ததுதான் முஞ்சியில எழுதியிருக்கே.....
நான் உதவி இயகுனராக சேர வேண்டும் என்றேன்...
டைட்டில் பாக்கற இல்ல ..எட்டு பேர்
இருக்காங்க.. இது அவர் ....
அட்லீஸ்ட் டயலாக் அசிஸ்டன்ட் வேலையாவது ....என்று இழுக்க...
டயலாக் எழுத தெரியுமா ..... இது அவர்.
நான் சொல்ல அல்லது கேட்க துவங்கும் முன்னமே பதில் வந்து விழுந்தது.
அதற்குமேல் என்ன கேட்பது என்று எனக்கு குழப்பம் ....
நீ ஒரு மாசம் கழித்து வந்து பார் .....என்றார்.
சொல்லவந்ததை சொல்ல முடியவில்லையே என்கிற ஆத்திரம் .....
நாய் மீது கோபம் ...சொந்தகரனையே தெரியாது என்றவர் மீது கோபம்....
சினிமாக்காரன் வழக்கமாக சொல்லும் ஒரு மாதம் கழித்துவா ...!
இந்த "வா" என்கிற ஒற்றை வார்த்தை என்மனதில் ஆழமாக பதிந்தது.
விடக்கூடாது .... விடமாட்டேன் ....
சரி சார் ...என தலையாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.
சரியாக .......மிகச்சரியாக ஒரு மாதம் கழித்து
'ஒரு கடிதத்தோடு '
மீண்டும் ஒரு காலை பொழுதில் அவர் வீட்டு வாசலுக்கு வந்தேன்..........?

No comments:
Post a Comment