Powered By Blogger

Thursday, September 29, 2011

சில நாட்கள் ...11




ஜனனம் ....


கண்களில்  நீர்  கோர்துக்கொண்டிருக்க .... 
எதிரே  வலியோடு  நீ நிற்பதுகூட  
என்  கண்களுக்கு  புலப்படவில்லை ....
அது  ஒரு  ஜனனதிற்கான  கண்ணீராய் இருந்தாலும் ...
உள்ளூற  மரண  பயம் ...
ஜனனத்திற்கும் ... மரணத்திற்கும் .....
வித்தியாசம்  ஒரு மெல்லிய கோடுதானே ....


உன்னை  அறுவை சிகிச்சைக்கு அழைத்துக்கொண்டுபோய்
அரைமணி நேரம்  கழித்து 
மலர்ந்த  முகத்தோடு ஒரு  அம்மா  தேவதை போல 
என்னை நோக்கி வந்தபோது ......
நான் மீண்டும் உயிர்த்தேன் ....

நேற்று நடந்தது போல இருக்கிறது...
17  ஆண்டுகள் கடந்துபோயவிட்டது ..
ஆம் கண்மணிக்கு பிறந்த நாள் ...!
(பிறந்த தேதியை நாமா முடிவு செய்தோம் ..
அதற்குள் இறந்த தேதியை காண 
நீ இன்டர்நெட்டில் அலைபாய்கிறாய்....)

ஒரேஒரு வித்தியாசம் ....
வழக்கம்போல் அப்பாவின் முகத்தில் விழிக்கவில்லை ...
அதையும் நல்லதாக எடுத்துக்கொள் ...நல்லதே நடக்கும் ...
அப்பாவின் அன்பு முத்தங்கள் ...!

அன்புடன் அப்பா.....

No comments: