Powered By Blogger

Friday, September 30, 2011

சில நாட்கள் ...12


When I do something great, no one ever seems to remember, 
but when I do something wrong, no one can ever seem to forget.


இன்பமும் ..துன்பமும் ..போலத்தான் மனிதர்களும் இருப்பார்கள் போல..
பகல் பொழுது மிக இனிமையாக கழிந்தது ... வீட்டுசாப்பாட்டை இனிதே 
முடித்தபோதுதான் ... அது ஆரம்பித்தது ...

இன்று புதிதாய் சேர்ந்த இரண்டு பேரில் ஒருவர் காலையில் இருந்தே 
நல்ல மயக்கத்தில் இருந்தார்...?
நேற்று சேர்ந்த நண்பருக்கு ..எண்களின் எல்லா உறவினர்களையும் 
கண்ட பின்புதான் உரைத்திருக்க வேண்டும் ... திடீரென வீட்டுக்கு போகிறேன் 
என கிளம்பியவர் பாவம் வாசலில் நின்றுகொண்டிருக்கிறார் ...

இன்று சேர்ந்த நண்பருக்கு ட்ரிப் எல்லாம் ஏறி முடிந்தபிறகு பீடி வேண்டுமாம் 
என்னை எப்படியாவது உஷார் பண்ணித்தர சொல்ல்கிறார்.... சட்டென மனித
மனம் ஏன் இப்படி மாறி போகிறது ...

அதை .. இதை ... என தேடுகிறது ...

அங்கு சேரும்போதுதான் எதையும் கொண்டுபோக முடியாது ...சேர்ந்தபிறகு ...
பீடியை இரும்பு கட்டில் பைப்பில் வைப்போம்... ஹான்ஸ் பேன் கப்பில் இருக்கும் ..
தேவைப்படும் போது பகிர்ந்து கொள்வோம் ... தண்ணி மட்டும் தான் கிடைக்காது .
நான் சேருவதற்கு முன்னாடி ஆறு பீடி ஒரு நாளைக்கு தருவார்களாம் ...
நம்ம நேரம் ...? ஆறு மணிக்கு மேல் இரண்டாவது மாடியில் இருந்து பைப்லயன்
வழியாக ஒருவர் இறங்கி போய் வாங்கி வருவர் .. மாட்டிகொள்ளகூடாது என்று 
அவரவர் கடவுளை பிராத்திப்போம் ...


மாலை வகுப்புக்கு தயாராகிக்கொண்டிருந்தேன் .. முகம் கழுவி வெளிவரும் போது
அந்த பீடி பார்டி மாதிரி ஒருவன் மாடி பக்கம் ஏறுவது போல தெரிந்தது.
அவரது கட்டிலை பார்த்தேன் .... ஆள் இல்லை ...எதோ மனசுக்கு பட்டது .  
சட்டென சதீஷை அழைத்து அந்த மனிதரை பின்தொடர சொன்னேன் ..
அதற்குள் அது நடந்தேவிட்டது ...
தலையில் இருந்து கழுத்து வழியாக ரத்தம் கோடாக வழிய ....
திருப்பிபோட்ட கரப்பான் பூச்சியை போல .... அந்த மனிதன் மல்லாக்க கிடந்தான்.
முதல் மாடியில் இருந்து நான் பார்க்க ... 
இரண்டாவது மாடியில் இருந்து அவன் விழுந்திருந்தான் .


அனைவரும் பதறி வாசலுக்கு வந்தால் ....
வீட்டுக்கு போகிறேன் என்று சொன்ன அந்தமுதல் மனிதன்
இன்னமும் கெஞ்சிகொண்டிருந்தான்....


ஒரு பீடிக்காக இவன் தலைகுப்புற விழுந்தானா ...?
அவன் எதற்காக வீட்டுக்கு போயே தீரவேண்டும் என்று அடம் பிடிக்கிறான் .....


சில  சமயங்களில் மனிதர்களை புரிந்து கொள்ள முடிவதில்லை ...
அவ்வளவு ஏன் என்னையே என்னால் 
பல சமயங்களில் புரிந்துகொள்ள முடியவில்லையே ....?


அந்த சதிஷ்சுக்கு பின்னர் மனநலம் பாதிக்கப்பட்டு ...(அல்லது நடித்து )
அவனும் வீட்டிற்கு போய்... இப்போது நலமாய் இருப்பதாக செய்தி ...
















No comments: