| நடிகன்....! |
மனிதனுக்கு மிக இயல்பாய் வரக்கூடிய விசயங்களில் ஒன்று நடிப்பு ....!
வாழ்வின் பல்வேறு காலக்கட்டங்களில் நாமும் நடித்துக்கொண்டிருக்கிறோம் ...!!!!
அந்த நடிப்பு மிக இயல்பாய் இருக்கும்போது ..., அனைவரும் அதை நம்புகின்றனர் .
ஆனால் அந்த நடிப்பின் இயல்பு நிலை மாறும்போது ....
மாட்டிக்கொள்கிறோம். அல்லது வேஷம் கலைந்துபோகிறது ...
மூன்று ...நான்கு நாட்களாக மிக இயல்பாக ஒரு நாடகம் இந்த இடத்தில்
நடந்து கொண்டிருக்கிறது . நானும் எத்தனையோ நடிகர்களை பார்த்து வியந்து
இருக்கிறேன் .. கற்றும் கொடுத்து இருக்கிறேன் ..
இங்கும் கூட அந்த நடிப்பு இயல்பாகத்தான் இருந்தது ..அனைவரும் அதை
நம்பினோம் .
ஒரு கட்டத்தில் இலக்கணம் பிசகி நடிப்பு ...நாடகமாக மாறியபோது புரிந்தது....
நடிப்பிற்கும் .., நாடகத்திற்கும் இடையே உள்ள பிழை ...
நல்ல காரணம் (கதை )
சிராக காட்சிகளை அமைத்தது (திரைக்கதை)
நினைத்த காரியத்தை முடிக்க போகும் வேளையில் (டைரக்ஷன் )...
சின்னதாக கோட்டை விட்டதால் மாட்டிக்கொண்டான் ..
இன்று இரவு நிம்மதியாக உறக்கம் வரும் ...
கரணங்கள் எண்ணத்தில் அலையாது.. காட்சிகள் மனதில் நிழலாடாது...
படம்தான் பெயிலியர் படமாக முடிந்து விட்டதே ...!
நல்ல புத்தியையும் .......
நல்ல சிந்தனையையும் .......
நல்ல செய்கையையும் ........
ஆழ்ந்த உறக்கதையும்.... .
அவனுக்கு கொடுக்கும்படி அவனை
உரிமையோடு வேண்டுவேன் ..
ஏனோ காரணம் இல்லாமல் ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது..
"அடி உதை உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான் "
சிரிப்பாக இருக்கும் சிலபேருக்கு ....வியப்பாக இருக்கும் சிலபேருக்கு ...
காரணம் புரியாது பல பேருக்கு ...!
எவனோ ஒருவன் எங்கிருந்தோ ஆட்டுகிறான் ...
நாமெல்லாம் ஆடிகொண்டிருக்கிறோம் ...
ஆடும் வரை ஆட்டம் ......ஆடு ....?
அன்புடன் நான் ......

No comments:
Post a Comment