![]() |
| பொம்மை ... |
வாழ்கையே ஒரு பொம்பலாட்டம் தான்.....
நீ....நீ தான்... அந்த சூத்திரதாரி ...
எப்படி நீ என்னை ஆட்டுகிறாயோ அதன்படி ஆடுவேன் ...
ராமனாக எனக்கு வேஷம் போட்டால் ..... ராமனாக இருப்பேன் ...
ராவண வேஷம் எனக்கு போட்டால் ராவணனாக மாறுவேன் ......!
ஏன் அகலிகை வேஷம் போட்டால் அகலிகையாக கூட மாறுவேன் .....
ராமன் பாதம் படும் வரை காத்திருப்பேன் ...?
நீ குயவனாக இருக்கிறாய் ..
உன் எதிரே களிமண்ணாய் நான் ...
நீ பூந்தொட்டி செய்தால் உனக்கான
மலர்களை வளர்த்து தருவேன் ...
ஒரு குடமாக செய்து காய போட்டால் ....
குளிர்ந்த நீரை உனக்கு தருவேன் ...
எதுவாக செய்தாலும்...
உன் அன்பு தாராளமாய் கிடைக்கும்
அளவுக்கு உன் தோழனாக இருப்பேன் ...
ஆனால்...
சுட்ட மண்ணாக என்னை காயவைத்துவிடதே...!
உன் உள்ளங்கையில் பூக்கும் சிறு வியர்வை
துளிகளுக்குள் என்னை வைத்துக்கொள் ....
என்றைக்கும் உனக்கு பயனுள்ளவனாக இருப்பேன் ......?
அன்புடன் நான் ...


No comments:
Post a Comment