Powered By Blogger

Friday, September 30, 2011

சில நாட்கள் ...15

நினைவுகளும் ...கற்பனைகளும் ..

மனிதன் ஜடமாகாமல் உயிர் வாழ எது அவசியம் ....
நன்றாக யோசித்துபாருங்கள் .... விடையை உங்கள் கற்பனைக்கே 
விட்டுவிடுகிறேன் ... எதைவேண்டுமானாலும் பதிலாக சொல்லுங்கள் ...!

இரண்டே இரண்டு விஷயங்களை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன் ...
"நேற்றைய நினைவுகளையும் ...நாளைய கற்பனைகளும் தான் அவை .."

இப்போது யோசித்து பாருங்கள் ...
இவை இரண்டையும் மனிதன் மறந்து போனால் 
அவனுக்கும் மரக்கட்டைக்கும் என்ன வித்தியாசம் ...
மரக்கட்டைக்கு உயிர் இருந்தால் என்ன போனால் என்ன ...?

சிந்தித்து பாருங்கள்
 'நேற்றைய நினைவுகள் ' எது என்பதை ..
நேற்று வரை உன்னிடம் 
இருந்த அல்லது இருந்ததாக 
நீ நினைத்துகொண்டுருந்த அத்தனையும்...,
ஒரு நொடி பொழுதில் உன்னை விட்டு போனாலோ 
அல்லது மறந்து போனாலோ ...,


உன்னிடம் இருந்த ... இருக்கிற 
அத்தனையும் இப்போது இல்லை ...
என்றுதானே அர்த்தம் ..!


சரி........
இனி "நாளைய கனவு "
எதிகாலத்தில் நீ என்னவாக ஆகப்போகிறாய் ..
எப்படி இருக்கப்போகிறாய் ...என்கிற சிந்தனையும் 
உன்னை விட்டு காணமல் போனால் நீ என்ன செய்வாய்...
நன்றாக யோசித்துப்பார் .........
இப்போது நீ ஒரு ஜடபொருள்தானே .....!


"நேற்றைய நினைவுகள் "
"நாளைய கனவுகள் "


இரண்டும் இல்லாமல் உன்னால் வாழ முடியுமா ...?
மனிதனை தேர்ந்த / தெளிந்த நீரோடைபோல் 
வாழ வழிகாட்டுவதே அவை இரண்டும்தானே....


பிறகு ஏன் கீதையில் கிருஷ்ணன் அப்படி சொன்னான் ...?


"எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது....
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்".....


எத்தனை முரண்பாடு ..?
யோசி ......யோசி....மாத்தி யோசி .....!


அன்புடன் நான்...
















No comments: