Powered By Blogger

Wednesday, September 21, 2011

சில நாட்கள் ...3

உங்களுக்காக....
முதல் முறையாக கம்பிகளுக்கு வெளியே அவர்களும் ....
கம்பிகளுக்கு உள்ளே  நானும் ....
இரண்டு நாட்களுக்கு முந்தய  அம்மாவின் 
பிறந்த நாளுக்கு நானும் ...,
நாளை பிறந்தநாள் கொண்டடபோகும் 
மனைவிக்கும் ................
கம்பிகளுக்குஇடையே ஆசிகளை பெற்றுக்கொண்டது 
மிக ..மிக ..அபூர்வமான விஷயமாகி போனது ..!  
கம்பிகளை  ஒட்டி கன்னத்தை நான் வைக்க ...
அதே கம்பிகளின் இடையில் தனது உதட்டை வைத்து 
என் சிறிய மகள் முத்தமிட்டது ....
கண்களில் நீர்த்துளிகளை வர வைத்தது ..
(சின்ன வயதில் பள்ளிகூடத்தில் அவளை விட்டு விட்டு வந்தது 
ஏனோ ஞாபகத்தில்  வந்து போனது )
போகும் போது என் உருவம் அவர்கள் கண்களுக்கு தெரியும் 
வரை கையசைத்தது 
மனதில் நீங்காத நினைவுகளாய்  தங்கிப்போனது 
சீக்கிரமாய் வந்து விடுவேன் செல்வங்களே ......
(என்று கதறி அழ வேண்டும் போல் இருந்தது .)


No comments: