| நீயும் ...நானும் ... |
உணர்வுகள் ....3
"நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை ...,
உன்னை கைவிடுவதும் இல்லை "......
நம் திருமணத்திற்கு முன்னரும் ... பின்னரும்
கடந்த 25 ஆண்டுகளாக
உன் பிறந்த நாளில் உன்னோடு இருந்தேன் ...
அவை எல்லாம் மகிழ்வான
தருணங்களாக எனக்கு இருந்தது ...
அனால் இம்முறை ...?
கவலை படாதே கண்ணே ....அடுத்த ஆண்டு புது மனிதனாய் ...
புதிதாய் கொண்டாடுவோம் ....
எப்போதும் பொன் நீ ... நீயாக இரு ..
நான் நானாக இருக்கிறேன் ..
நடந்தவை நடந்ததாக இருக்கட்டும் ..,
இனி நடப்பவை நல்லவைகளாக இருக்கும் ....
இப்போது எனக்கு ஏற்பட்டிருப்பது .. தற்காலிக ஊனம் தான்..
சரி செய்து கொள்ளகூடியது ...
நேற்றைய பொழுது நேற்றோடு ..
இன்றைய பொழுது என்னோடு ...,
நாளைய பொழுது நம்மோடு .....
மீண்டும் வருவேன்..."மீண்டு" வருவேன் ..
அன்புடன் நான் .............

No comments:
Post a Comment