Powered By Blogger

Thursday, September 22, 2011

சில நாட்கள் ...6

கடிதம் ....?

பிரிய சகியே ...

உடலுக்கும் .. மனசுக்கும் சற்று இளைபாறுதல் கிடைக்கும்போதுதான் ..,
பழைய நினைவுகள் மனசுக்குள் வந்து வந்து போகிறது ...
நம் திருமணத்தின்போது  நிறைய பரிசுபொருட்கள் வந்தன.

அனால் நான் உனக்கு ஒரு கடிதம் மட்டுமே தந்தேன் .. 
கடித வரிகள் நமக்குள் இருக்கட்டும் .. எனினும் ஒன்றை 
குறிப்பிட்டு இருந்தேன் ..


நீ  என்ன கேட்டாலும் செய்துதருவேன் .. ஆனால் அது சற்று தாமதமாக 
கிடைக்கும்  என்று ...
(சற்று தாமதமா...?) 
நீண்ட நாட்களாக நீ விரும்பிகேட்டது .., 
இப்போது உனக்கு கிடைக்க போகிறது ..
நிம்மதியாக இரு ..

தன்னில் பாதி கொடுத்த பரமேஸ்வரனை போல் இல்லாமல் 
தன்னை முழுவதும் மனைவியிடம் அர்பனிபவனே..
உண்மையான மனிதன் (கணவன்)...
இதுவரை அப்படி இல்லாது போனா லும்...
இனி அப்படி இருப்பேன் ... 


அன்புடன் நான் ......
 

No comments: