Powered By Blogger

Thursday, September 22, 2011

சில நாட்கள் ...7


அம்மாவின்.... கரம்பிடித்து ....


உலகின்  சகல ஜீவன்களும் சொல்லும் முதல் சொல் ....
முதல் சொல்  மட்டுமா அது ...இறுதியானதும் அதுவே ...
சுகம் - வலி      ... இரண்டும் கலந்தது தேகம் ...
இருள் - ஓளி   ... இரண்டும் கலந்தது காலம் ..
ஆண் - பெண்  ... இரண்டும் கலந்தது ஞானம் ...

மெய்யாகவே எனக்கும் ஞானம்  என பெயரிட்டாய் ..
அந்த ஞானத்தோடு நான் இருந்திருந்தால் ... இந்நிலையை 
தவிர்த்திருக்கலாம் ...
முதியோர்  இல்லங்களில்  எராளமான "தாயை" பார்க்கும் போதெல்லாம் 
உன் நினைவுதான் வருகிறது ...
அன்பே சிவம் என்றால்.. அன்பே தாய்...
தாயே கடவுள் ...
என்னை உனக்கு தெரியும் ..
உன்னை எனக்கு தெரியும் ...
பாவம் நம்மைத்தான் பிறருக்கு தெரியாது ...
அவர்கள் தாயை பற்றி தெரியாதவர்கள் ...!
அறியாதவர்கள் ... 
நீர் அடித்து நீர் விலகுவதில்லை ......
உன்னோடு நான் ... என்னோடு  நீ ... என்றும் ..?
உனக்கு முன் நானோ ...! எனக்கு முன் நீயோ ..?

எத்தனை பேருக்கு தெரியும் ... புரியும்...
அம்மாவின்  வலி ...அன்பு ...சிரிப்பு ... அழுகை .. மௌனம் ..
இது எத்தனை பேருக்கு  தெரியும் ... புரியும் ..
இதை 
பிறப்பில் இருந்தே யாரும் தெரிந்து கொள்ள முயலவே இல்லை...
அம்மாவில் 
நல்ல அம்மா ..  கெட்ட அம்மா ....
பிடித்த  அம்மா .. பிடிக்காத அம்மா ..?

நீடிய பொறுமையும் ... அன்பும் ... அமைதியும் ..
சாந்த குணமும்  கொண்டவள் அம்மா ....

உயிர் கொடுத்தவள்  நீ ..
உடல் வளர்த்தவள்  நீ ..
நாற்று  நட்டவள்  நீ ...
களை எடுத்தவள் நீ ...
ஆனால் கதிரை  மட்டும் தானம் செய்கிறாய் ....
அதுவும் எனக்காக தானே ....

தினமும்  கனவிலாவது  
கடவுளை காண  கண்  மூடுகிறேன் ...
விழித்தல் எதிரே  நீ  நிற்கிறாய் ....

அன்புடன் நான் ....

No comments: