| வாசல் தேடி .....! |
நாளைய வரவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் ..
காத்து இருத்தலிலும் ஒரு சுகம் உண்டு ..
அது உனக்கு முன்பு பழக்கமில்லாத விஷயமாக இருந்தது .
எனக்கு பழகிய விஷயமாக இருந்தது...
இன்று எல்லாமே தலைகிழ் ... எனக்காக காத்திருக்கிறாய் ...?
எப்போது ....எப்படி ...வருவேன் என்று ...!
காத்தாடியாக என்னை நினைத்துகொள் ....
நூல் கண்டு உன் கையில் இருக்கிறது ....
காத்தாடி எப்போது நீ .. நினைகிறாயோ அப்போது...
அது உன் கரங்களுக்கு வந்துவிடும் ...
அதுபோல தான் நானும் .. நீ நினைக்கும்போதெல்லாம்
உன் முன் நிற்பேன் ...
சுய நினைவுடனோ .... நினைவில்லாமலோ ...
ஆனால்
"உன் நினைவில்லாமல் என் கால்கள் எப்படி
வாசல்படி வந்து சேரும் "......
அன்புடன் நான் ........

No comments:
Post a Comment