| பேக்கு...! |
ரங்கநாதன் தெருவில் தீபாவளிக்கு துணி எடுத்துவிட்டு திரும்பியபோது ....பின் பக்கத்தில் எதோ குறைவது போல உணர்ந்தேன். ஒருவர் என் தோளைதொட்டு விஷயத்தை சொல்ல .... கிழிந்த பின் பக்கத்தை தடவியபடி .., இலக்கு தெரியாமல் திரும்பவும் துணிக்கடை கல்லா வரை ஓடி, மேல்முச்சு கீழ் மூச்சி வாங்க நின்றேன்.
என்ன ஏது என்று கேட்க கூட தோணாமல் (ஏன் கேட்ட்க வேண்டும்) கல்லாவில் காசு வாங்கி போடுவதே குலத்தொழில் என்றிருந்த மனித இயந்திரத்தை ...ஒருமுறை பார்த்துவிட்டு ..., எதையோ கீழே தேடிவிட்டு திரும்பும் போது ....தெரு முனையில் அம்ம்போவென விட்ட மனைவியும்.., பிள்ளைகளும் ஞாபகத்திற்கு வந்தனர்.
பட்ஜெட்க்குள் எடுத்த துணி பிடிக்காத கோபத்தில் இருக்கும் மனைவியும் ...சதா பராக்கு பார்க்கும் பிள்ளைகளும் (ஆள்தான் வளர்ந்திருக்கியே தவிர அறிவு..) அனேகமாக இந்த வார்த்தை எல்லா மனைவி , மக்களுக்கும் பொதுவான ஒரு விதியாக இருக்கும்.
திரும்பவும் நாலு பேரை இடித்து தள்ளியபடி போன என்னை கவனிப்பதை விட அவரவர்களின் கைப்பையையும் . பேண்டின் பின்பக்கத்தையும் ,பெண்கள் தங்களின் மாரப்பையும் சரிசெய்தனர். எல்லாரும் தெளிவாதான் இருக்காங்க ...
ஒருசிலர் என்னை ஒருமாதிரியாக பார்த்ததை தவிர்த்து ...நம்மாளுங்க நின்ன இடத்தில் பார்த்தால் காணவில்லை . கோன்ஐஸ் கடையில் கைப்பை காணாமல் போன சொரனையே இல்லாமல் ஜாலியாக ஐஸ் சப்பியபடி இருந்தனர் .....
அவர்களின் அந்த சின்ன சந்தோசம் எனக்கு கோபமாக மாறியது , நடுரோடு என்று பார்க்காமல் . சோறுதான் திங்கறீங்களா ...இல்ல ...என்று கத்திய என் கோபம் புரியாமல் கையில் இருந்த கோனை நழுவவிட்ட பெரியவளை பார்க்கும் போது ஒரே ஒரு வினாடி பரிதாபமாக இருந்தது.
சட்டென சொரணை வந்து பீ ..பீ தலைக்கேறியது ...சற்று தொலைவில் இருந்த தானாக்காரரிடம் சென்று விவரத்தை சொல்ல ..கொஞ்சம்கூட அலட்டிக்கொள்ளாமல் .., எல்லோருக்கும் தெரிந்த காவல் நிலையத்திற்கு வழி சொல்லிவிட்டு தன் கடமையை செய்ய துவங்கினார்..
கொஞ்ச நேரம் ஒன்னும் புரியல .. எப்படியும் அவகிட்ட 100 ரூபா இருக்கும் .. எப்பவும் பேக்குங்கனு நினைக்கிற பசங்க பர்சுல 150 இருக்கும் ..
எதற்கும் கவலையே படாமல் கோன் ஐஸ்-ன் கடைசி துளியை ரசித்து சுவைத்த சின்னவளை பார்த்த போது மனம் லேசானது.
என்ன டாடி என்றவளிடம் ..வீட்டுக்கு போகலாமா என்றேன் .
அப்போ சரவணபவன் ...!
வந்த கோவத்தை அடக்கிக்கொண்டு ,சரவணபவன் இல்ல ..வசந்த பவன் ஆனா ஆளுக்கு ஒரு தோசை மட்டும்தான் வாங்க.
மணி பர்சை என்னிடம் கொடுத்துவிட்டு கை கழுவபோன ..பெரியவளின் பர்சில் எட்டாக மடித்த...100 ரூபாயும் சில்லறைகளும் இருந்தன ..
சுருண்டிருந்த 100 ரூபாயை எடுத்து நீவியபோது .. காணாமல்போன பர்சில்... யாருக்கும் தெரியாமல் இடுக்கி வைத்திருந்த 1000 ரூபாயில் இருந்த காந்தியும் .. 100 ரூபாயில் இருந்த காந்தியும் ஒரே மாதிரி சிரித்துக்கொண்டிருந்தார் ..
எரும மாடே பர்சுல இருந்து காசு எடுத்தியா ...? ஏதேதோ ஞாபகங்கள் வந்து சுருக்கென்றது.
என்னையும் அறியாமல் கைகள் கிழிந்த பின் பக்கத்தை தடவின ....!

1 comment:
மிக அருமையான சிறுகதை..
Post a Comment